அனிருத், காவ்யா மாறன்: இசையமைப்பாளர் அனிருத், SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் நடக்கவிருக்கும் நிலையில் நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்புக்காக அழைப்பிதழ் அளித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு வெள்ளை, ஊதா நிறத்தில் பெட்டி மாதிரி இருக்கும் அழைப்பிதழை கொடுத்து வருகிறார் பெண்ணின் தந்தையான கலாநிதி மாறன்.
அழைப்பு வீடியோ: அது திருமணத்திற்கான அழைப்பு இல்லை வரவேற்புக்கான அழைப்பு தான். அது என்ன டப்பா மாதிரி இருக்கிறது. அதற்குள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அந்த அழைப்பிதழை வடிவமைத்து உருவாக்கிக் கொடுத்தவர்கள் pinkwhistleman ஆட்கள். ரஞ்சனி ஜயங்கார் துவங்கிய pinkwhistleman தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத், காவ்யா ரிசப்ஷன் அழைப்பு வீடியோவை வெளியிட்டு அதை உருவாக்கிய விதத்தை விரிவாக தெரிவித்துள்ளனர்.
அழகான அழைப்பிதழ்: அந்த டப்பாவை திறந்தால் அதற்குள் அழைப்பிதழ் இருக்கிறது. அழைப்பிதழில் இருப்பதை படித்துப் பார்த்துவிட்டு டப்பாவை தூக்கிப் போட நிச்சயம் மனசு வராது. நகைகளை வைக்கும் பெட்டி மாதிரி அவ்வளவு அழகான வேலைப்பாட்டுடன் உள்ளது. அந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை எவ்வளவு என்பது தெரியவில்லை.
இந்நிலையில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன், திமுகவை சேர்ந்த துரைமுருகனின் பேத்தி திருமண அழைப்பிதழை ஜெயிலர் 2 பட நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு அன்பாக்ஸ் செய்த வீடியோ வெளியானது. அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் நடித்ததால் சுராஜ் கையில் இருந்த அழைப்பிதழ் காவ்யா மாறன், அனியின் திருமண அழைப்பிதழ் என பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கிரீஸ் கல்யாணம்: வெளிநாட்டில் திருமணம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால் சினிமா பிரபலங்கள் இத்தாலி நாட்டை தான் தேர்வு செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது அனிருத், காவ்யாவோ கிரீஸில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். நவம்பர் 10, 11 என இரண்டு நாட்களில் கிரீஸில் திருமண கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது.
அந்த திருமணத்திற்காக சென்னையில் இருந்து நான்கு தனி விமானங்களில் நான்கு குடும்பத்தார் செல்கிறார்கள். அதில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷ் செல்கிறார் என்று தகவல் வெளியாகி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நவராத்திரி விழா: திருமண வேலைக்கு இடையே அனிருத் வீட்டில் நவராத்திரி விழா நடந்தது. அதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டார்கள். அந்த விழாவுக்கு மனைவி ஆர்த்தியுடன் வந்த சிவகார்த்திகேயன் தன் தலைவர் ரஜினியை பார்த்து அவரிடம் ஆசி பெற்றார்.
அனிருத் ஹேப்பி: அனிருத் ரவிச்சந்தர் தற்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார். தான் தலைவருக்காக இசையமைத்த ஜெயிலர் 2 படம் ரூ. 710 கோடியை தாண்டி வசூலில் புது சாதனை படைத்தது ஒரு சந்தோஷம். மேலும் காதலியே மனைவியாகப் போவது இன்னொரு சந்தோஷம் ஆகும்.
அனிருத்துக்கு கல்யாணம் நடப்பது கஷ்டம்: அவரே சொன்ன காரணம்
இசைப்பணி: இதற்கிடையே இசையமைப்பாளர் எனும் தன் தொழிலால் தனக்கு ஏற்ற பெண் கிடைப்பது எளிது இல்லை என்றும், அதனால் தனக்கு திருமணம் நடப்பது என்பது கஷ்டம் என்றும் 9 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியில் அனிருத் தெரிவித்தது தற்போது வைரலாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
