அனிருத் திருமணம்: இசையமைப்பாளர் அனிருத், தொழில் அதிபர் காவ்யா மாறனின் திருமணம் நவம்பர் 11ம் தேதி கிரீஸில் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. திருமணம் முடிந்து 10 நாட்கள் கழித்து அதாவது நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அனிருத் திருமணத்தை அன்றே துல்லியமாக கணித்தார் ஜெயஸ்ரீ என 10 ஆண்டு பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. தந்தி டிவிக்காக அப்சரா ரெட்டி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் அனிருத், நமிதா கலந்து கொண்டபோது தான் டார்டர் கார்டு ரீடரான ஜெயஸ்ரீ அவரின் திருமணம் குறித்து கணித்தார்.
தனுஷ் எதிர்காலம்: அதே ஜெயஸ்ரீ நடிப்பு ராட்சசனான தனுஷுக்கும் டாரட் கார்டுகளை பார்த்து கணித்து கூறியிருக்கிறார். அனிருத் வீடியோவுடன் தனுஷ் கணிப்பு குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பற்றி ஜெயஸ்ரீ கூறியதாவது,நீங்கள் பெர்ஃபக்ஷனிஸ்டாக இருப்பீர்கள். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஒரு விஷயத்தை கற்றுக் கொண்ட பிறகே அதற்குள் செல்ல விரும்புவீர்கள். யாராவது நீங்கள் சொன்னதை செய்யாவிட்டால் கோபம் வரும். மக்களிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பீர்கள் என ஜெயஸ்ரீ சொல்லச் சொல்ல ஆமாம் என்பது மாதிரி தலையை அசைத்துக் கொண்டிருந்தார் தனுஷ்.
ஜெயஸ்ரீ மேலும் கூறியதாவது, 50 வயதுக்கிற்கு பிறகு பெரிய அளவில் வளர்ச்சி அடைவார். 40 வயது முதல் 50 வயதில் ரொம்ப டிரெண்ட் செட்டிங் செய்வார். 40 வயதில் இருந்து 50 வயது அவரின் வளர்ச்சியின் உச்சம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றார்.
அதை கேட்ட அப்சரா ரெட்டியோ சினிமாவிலா என்று கேட்க ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸில் இருக்கும் என்றார் ஜெயஸ்ரீ. எமோஷன் அடிப்படையில் நிறைய விஷயங்களை செய்தால் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்றார். உடனே தனுஷை பார்த்து நீங்கள் எமோஷனலான ஆளா என அப்சரா கேட்க, நான் ஒரு எமோஷனல் fool என்று பதில் அளித்தார்.
தனுஷ் மகன்கள் : உங்கள் மனதில் தோன்றும் கேள்வியை கேளுங்கள் என ஜெயஸ்ரீ சொன்னதும், என் மகன்கள் எப்படி இருப்பார்கள் என யாத்ரா, லிங்காபற்றி கேட்டார் தனுஷ். உங்க பசங்க நல்லா இருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பிறந்த ஊரிலேயே இருக்காமல் வெளியூருக்கு சென்றுவிடுவார்கள். நன்றாக படிப்பார்கள் என சொன்னதும் தனுஷுக்கு சந்தோஷம். உங்களுக்கு நிறைய எதிரிகள் இருப்பார்கள். வேலையில் நிறைய சவால்கள் வரும், உதவி செய்வது போன்று எதிரிகள் இருப்பார்கள் என ஜெயஸ்ரீ தன் கணிப்பை தொடர்ந்தார். அதற்கு தனுஷோ, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனையே இல்லை என்று கூலாக கூறினார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அனிருத் மனைவி யார்?: அனிருத்துக்கு ஜெயஸ்ரீ கூறியதாவது, அனிருத்துக்கு காதல் திருமணம் தான் நடக்கும். அனிருத்தின் மனைவி திரையுலகை சேர்ந்தவராக இருக்க மாட்டார். நிறைய படிச்ச பெண்ணாக இருப்பார். சென்னையை சேர்ந்தவர், அனிருத் வீட்டில் இருந்து 2, 3 கிலோமீட்டர் தொலைவில் தான் இருப்பார் என்றார். அதே மாதிரி நடந்திருக்கிறது. எம்.பி.ஏ. படித்த சென்னை பெண்ணான காவ்யா மாறனை அப்பா, அம்மா சம்மதத்துடன் மணக்கிறார் அனிருத்.
Source link
