அனிருத் மாமனார் யார் தெரியுமா?: ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்துக்கு அதிபதி

கலாநிதி மாறன் மருமகன்: இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி கிரீஸில் திருமணமும், 21ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில் அனிருத் பிடித்தாலும் புளியங்கொம்பாக பிடித்திருக்கிறார். கலாநிதி மாறனுக்கே மருமகனாகிறார். வாழ்த்துக்கள் அனி என ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

அது என்ன கலாநிதி மாறனுக்கே என நினைக்கிறீர்களா?. முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் ஒரு பிரபலமான தொழில் அதிபர் ஆவார். அதனால் தான் ரசிகர்கள் அப்படி வியந்து பேசுகிறார்கள். திருமணம் உறுதியான தகவல் அறிந்ததுமே கலாநிதி மாறனின் சொத்துமதிப்பை தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

யார் இந்த கலாநிதி மாறன்?: கலாநிதி மாறன் பற்றி தெரிந்து கொள்வோம். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிக்க அமெரிக்காவுக்கு சென்றார் கலாநிதி மாறன். படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய அவர் குடும்ப பிசினஸை கவனித்து வந்தார். அதன் பிறகே அவர் சன் டிவியை துவங்கினார்.

சன் குழும நிறுவனரான கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அவரின் சொத்துமதிப்பு ரூ. 24, 600 கோடி. அந்த சொத்துக்கு ஒரே வாரிசு காவ்யா மாறன். அப்பாவே பெரும் பணக்காரராக இருந்தாலும் தன் கடின உழைப்பால் ரூ. 409 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் காவ்யா மாறன்.

அப்பா வழியில் மகள்: தந்தை வழியில் வெளிநாட்டில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்ற காவ்யா மாறனின் கவனம் பிசினஸில் இருக்கிறது. கலாநிதி மாறன் போன்றே காவ்யாவும் பிசினஸில் ரொம்ப தெளிவு என்று நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் பாராட்டியிருந்தார். அதே பேட்டியில் தான் அனிருத், காவ்யாவின் திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.

அனிருத்துக்கு முதலாளியாக இருந்து வந்த கலாநிதி மாறன் தற்போது மாமனார் ஆகப் போகிறார். நேற்று முன்தினம் ரிலீஸான ஜெயிலர் 2 படத்தை தயாரித்தது சன் பிக்சர்ஸ் தான். ரஜினிகாந்த் நடித்த அந்த படத்திற்கு இசையமைத்தற்காக அனிருத்துக்கு சம்பளம் கொடுத்தவர் கலாநிதி மாறனே.

காவ்யா, அனிருத் காதல் திருமணம்: நாடே கொண்டாடும் இசையமைப்பாளராக கெரியரின் உச்சத்தில் இருக்கும் அனிருத்தின் சொத்துமதிப்பு ரூ. 60 கோடி ஆகும். அனிருத்தும், காவ்யாவும் காதலிக்கிறார்களாம் என ஆண்டுக் கணக்கில் பேசப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு விரைவில் திருமணம் என அவ்வப்போது தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலை காவ்யாவோ, அனிருத்தோ உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தான் அனிருத், காவ்யாவின் திருமணம் இந்த ஆண்டு ஸ்பெயினில் நடக்கிறதாம் என பேச்சு கிளம்பியது. அதன் பிறகோ ஸ்பெயின் இல்லை கிரீஸில் நடத்துகிறார்களாம் என தகவல் கசிந்தது. அந்த தகவல் தற்போது உறுதியாகிவிட்டது. டெஸ்டினேஷன் வெட்டிங்காக வெளிநாட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் ஒரு சிலர் தான் கலந்து கொள்கிறார்கள்.

தங்கள் செல்ல மகளின் திருமணத்திற்கு வருபவர்களுக்கான பயணம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கலாநிதி மாறனும், காவேரி மாறனும் செய்து வருவதாக அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் என்.டி.டிவியிடம் தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களோ, சீக்கிரமாக உங்களுக்கு மனம்போல் திருமணம் நடக்கட்டும் என வாழ்த்திய நிலையில் அது மாதிரியே நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link