தே சிய பங்கு சந்தை அறிமுகம் செய்துள்ள ‘நிப்டி ரீட்ஸ் அண்டு ரியால்ட்டி இண்டெக்ஸ்’ இந்தியாவில் ‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் அறிமுகமாகும் பாதையை விரைவுபடுத்தியுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ரீட்ஸ்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் செயல்திறனை ஒருங்கிணைத்து காட்டும் அளவுகோலாக, இந்த புதிய குறியீடு இருக்கும். முதலீட்டாளர்கள் இத்துறையின் செயல்பாட்டை எளிதில் புரிந்துகொள்ளவும், மியூச்சுவல் பண்டுகள் பெஞ்ச்மார்க் அமைக்கவும் இது உதவும்.
இந்த குறியீட்டை அடிப்படையாக கொண்டு, பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ‘பேசிவ் இண்டெக்ஸ்’ பண்டு திட்டங்களை கொண்டு வர ஆய்வு செய்து வருகின்றன.
ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்த பின், ரீட்ஸ் மியூச்சுவல் பண்டுகள், நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரீட்ஸ் துறை கடந்த சில ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. குறைந்த முதலீட்டில் ரியல் எஸ்டேட் சொத்துகளில் பங்கேற்கும் வாய்ப்பு, காலாண்டு வருமானம் போன்ற அம்சங்கள் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.
ரீட்ஸ் மியூச்சுவல் பண்டுகள் அறிமுகமானால், சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பு மேலும் அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.
