அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட தென்கொரியா, தைவானை விரும்புவது ஏன்?

இந்திய பங்குச் சந்தையிலிருந்து, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.1.75 லட்சம் கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. இது 2025-ஆம் ஆண்டு முழுவதையும் விட அதிகமான தொகையாகும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என, அன்னிய முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்

 இந்தியா போன்ற நுகர்வு சார்ந்த சந்தைகளை விட, தென்கொரியா மற்றும் தைவான் போன்ற ‘ஏ.ஐ., மற்றும் செமிகண்டக்டர் சிப்’ தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடுகளை நோக்கி முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை திருப்பியிருக்கிறார்கள்

 கடந்த மார்ச் மாதத்தில் தென்கொரியா மற்றும் தைவான் சந்தைகளிலிருந்து அன்னிய முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி இருந்தாலும், அமெரிக்கா – ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புகள், இந்த நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன

 நடப்பு ஏப்ரல் மாதத்தில், இதுவரை தென்கொரியாவுக்கு 30,060 கோடி ரூபாயும்; தைவானுக்கு 46,760 கோடி ரூபாயும் முதலீடாக வந்துள்ளன. ஆனால், இந்திய சந்தையில் அத்தகைய தொழில்நுட்ப பலம் இல்லாத காரணத்தால், சுமார் 25,050 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன

 அன்னியமுதலீடுகள் வெளியேறினாலும், உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டில் இதுவரை 2.58 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்

 ‘தற்போது இந்திய பங்குகளின் மதிப்பீடு ஓரளவிற்கு சீராகியுள்ளதால், சர்வதேச பிரச்னைகள் ஓய்ந்த பிறகு, மீண்டும் வெளிநாட்டு முதலீடுகள் வர வாய்ப்புள்ளது’ என சந்தை சார்ந்த நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

Source link