அன்பின் அரவணைப்பில் ' பஞ்ச் '

டோக்கியோ: தா யின் அரவணைப்பு இல்லாமல் பொம்மையை கட்டியணைத்தபடி சுற்றித்திரிந்து சமூக வலைதளங்களில் பிரபலமான ஜப்பான் குட்டி குரங்கு ‘ பஞ்ச் குன்’ இறுதியாக தன் கூட்டத்துடன் இணைந்துகொண்டது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் பிறந்த, மக்காக் வகை குரங்கு குட்டி ஒன்றை அதன் தாய் சேர்த்துக் கொள்ளாமல் நிராகரித்து வந்தது.

மக்காக் வகை குரங்குகள் தன் குட்டிகளை சில நேரம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், மாதங்கள் சில கடந்தும், இந்த நிராகரிப்பு தொடர்ந்தது.

இதையடுத்து, அந்த குட்டியை பராமரித்து வந்த பூங்கா ஊழியர்கள், அதற்கு, ‘பஞ்ச் குன்’ என்று பெயரிட்டு அதன் தனிமையை போக்க ஆரஞ்சு நிறத்தில் ஒராங்குட்டான் பொம்மை ஒன்றை பரிசாக கொடுத்திருந்தனர்.

அதை தாயாக எண்ணிக்கொண்ட பஞ்ச் குன், செல்லும் இடமெல்லாம் அந்த குரங்கு பொம்மையையும் உடன் இழுத்துச் சென்றபடியே இருந்தது. அந்த பொம்மையை கட்டியணைப்பதும், அதன் மீது படுத்து உறங்குவதும் என தாய்ப்பாசத்திற்கு அல்லாடிய வீடியோ இணையத்தில் வெளியானது.

Image 1539236

இந்த காட்சிகள் காண்போர் இதயத்தை கணக்க வைக்கும்படி இருந்தது. பலர், குட்டி குரங்கு பஞ்ச் குன்னை தத்தெடுக்கவும் விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், ஏழு மாதங்களுக்கு பின், பஞ்ச் குன் அதன் கூட்டத்தோடு இணைந்துள்ளது.

சமீபத்தில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில், பெரிய குரங்கு ஒன்று பஞ்ச் குன்னை இறுக அணைத்து, அரவணைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இது பஞ்ச் குன் தன் கூட்டத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

Source link