கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் சிஎம் டி ஏ உள்ளிட்ட பிற சட்ட பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது அதன்படி திமுக நிர்வாகி பீடி அரசகுமார் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
100 கோடி லஞ்சம் பெற்றதாக
இதனைத் தொடர்ந்து பி.டி.அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி குற்றச்சாட்டின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அன்பில் மகேஷ்- க்கு சென்னை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சோதனையில் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அன்பில் மகேஷ் கைது
இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளன இந்த சம்பவம் திமுகவினர்மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து அவரை வெளியே எடுக்கும் முயற்சியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் சூழலில், அன்பில் மகேஷுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த திமுக துணை தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது. ஐயா அமைச்சர் பெரியசாமிக்கு மரியாதை கொடுக்காதவர் அன்பில் மகேஷ். அவர் கைதாவதில் ஒன்னும் தவறு இல்லை.. வரவேற்கத்தக்கதுதான்.. நானே 7,70,000 ரூபா நான் கட்டியிருக்கேங்க.. பணி மாறுதலுக்காக.. இத நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் சொல்றதுக்கு ரெடியா இருக்கேன்..
சென்னையில போய் நான் ஒன்னு கொடுத்திருக்கேன்.. அது ஒரு தலைமை ஆசிரியர் மூலியமா போயி, அரியலூர் சிஇஓ ஆபீஸ் மூலியமா கொடுத்து.. நான் அந்த பணி மாறுதலுக்காக வந்து, நான் எங்க வேணாலும் சொல்லி.. இதே மாதிரிதான் வலசை செட்டிப்பட்டியில 11 ஆசிரியர்கள் வந்திருக்காங்க.. அத்தனை பேரும் ₹7.5 லட்சம் ரூபா கட்டித்தான் வந்திருக்காங்க அந்த இடத்துக்கு..
திமுக துணைத் தலைவர் குற்றச்சாட்டு
சும்மா யாரும் வரல.. அது ஒரு அப்கிரேடு ஸ்கூலு.. அனைத்துமே ₹7.5 லட்சம்.. டிஸ்ட்ரிக்ட் டூ டிஸ்ட்ரிக்ட்னா ₹7.5 லட்சம்.. டிஸ்ட்ரிக்ட் டூ டிஸ்ட்ரிக்ட்னா ₹3.5 லட்சம் கட்டித்தான்.. அங்க டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்காங்க.. இத நான் எங்க வேணாலும் நிரூபிக்க நான் ரெடி..
ஐயா.. அமைச்சர் ஐயா அவர்கள் மூணு முறை லெட்டர் கொடுத்தாங்க.. பணிமாறுதலுக்காக.. இந்த மூணு முறை லெட்டரையுமே அவர் அவாய்ட் பண்ணிட்டாரு.. அன்பில் மகேஷ்.. அப்போ ஒரு சீனியர் அமைச்சரு.. ஒரு மாநிலத்தின் துணைப் பொதுச் செயலாளரே கொடுத்த லெட்டரவே ஒபே பண்ணாததா.. அவர் வந்து கட்சிக்குத் தகுதியானவர் இல்ல.. எல்லாரும் நாளைக்குத் சரவடி விடுங்க.. அன்பில் மகேஷ் கைதாயி இருக்கிறது. ஒன்னும் தப்பு இல்ல..
ஏன்னா, நம்ம பெரியசாமி அமைச்சருக்கே பங்கம் விளைவித்தவர்.அன்பில் மகேஷோட கைது வரவேற்கத்தக்கது.. என்னுடைய மனைவிக்கு பணி மாறுதலுக்காகவே நான் ரூ.7,70,000 செலவழிச்சேன்.
ஒரு கட்சிக்காரனுக்கே இந்த நிலைமை என்றால்.. மாற்றுக்கட்சி உறுப்பினர்கள், மற்றவர்கள் எல்லாம் என்ன செஞ்சிருப்பாங்கன்னு பாத்துக்கோங்க.. அவரோட கைதைப்பத்தி நீங்க யாரும் வருத்தப்படாதீங்க.. அன்பில் மகேஷ் எல்லாம் ஜெயிலுக்குப் போகக்கூடிய ஒரு ஆளுதான்.. பல தடவை நாங்க அவரைப் போய் முயற்சி பண்ணா ஒன்னும் பலிக்கல.. என்று தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ ஆதாரத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தும் பட்சத்தில், அன்பில் மகேஷுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
