சென்னை: தி.மு.க., வேட்பாளர் சிவா: இவரது பெயரில் ரொக்கம், வங்கி வைப்புத்தொகை, முதலீடுகள் வகையில், 2.18 கோடி ரூபாய்; குடும்பத்தினர் பெயரில், ரொக்கம், வங்கி வைப்பு நிதி, முதலீடுகள் வகையில், 72.75 லட்சம் ரூபாய் உள்ளன.
நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள், 3.86 கோடி ரூபாய் மதிப்புக்கு உள்ளன. மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில், 97 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்கள் உள்ளன.
வங்கி மற்றும் தனி நபர்களுக்கு செலுத்த வேண்டிய கடன், 1.06 கோடி ரூபாய் உள்ளது. வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை, 3.04 லட்சம் ரூபாய். மொத்த சொத்து மதிப்பு, 7.75 கோடி ரூபாய்.

அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை:
இவருக்கு, 12.47 லட்சம், மனைவி பானுமதிக்கு 76.33 லட்சம், குடும்ப உறுப்பினருக்கு 13.89 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு மொத்தம் 1.02 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மொத்தமாக, 10.81 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்து உள்ளது.
இவரது மனைவியிடம், 3.04 கிலோ தங்கம், 30.60 கிலோ வெள்ளி உள்ளன. அசையா சொத்து மதிப்பு, 59.88 கோடி ரூபாய். மொத்த சொத்துக்களின் மதிப்பு 70.69 கோடி ரூபாய்.
இவரது மனைவி பெயரில், 15 கோடி ரூபாய் கடன் உள்ளது. தம்பிதுரை மீது வழக்கு எதுவும் இல்லை.
தே.மு.தி.க., வேட்பாளர் எல்.கே.சுதீஷ்:
இவரிடம், 1.50 லட்சம் ரூபாய்; இவரது மனைவி பூர்ணஜோதியிடம் 1 லட்சம் ரூபாய்; அவரை சார்ந்து இருப்பவர்களிடம் 35,000 ரூபாய் கையிருப்பில் உள்ளன. சுதீஷிடம் 450 கிராம் தங்கம்; 2 கிலோ வெள்ளி; 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் உள்ளன.
இவரது மனைவியிடம், ஒன்றரை கிலோ தங்கம்; 2,850 கிராம் வெள்ளி; அவரை சார்ந்து இருப்போரிடம், 1,450 கிராம் தங்கம் உள்ளன.
மொத்தமாக, நகை, வாகனம், முதலீடுகள் என, சுதீஷிடம், 11.03 கோடி; மனைவியிடம் 13.17 கோடி; அவரை சார்ந்திருப்போரிடம், 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. எல்.கே.சுதீஷிடம், 28.16 கோடி; மனைவியிடம் 19.69 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
சுதீஷ் பெயரில் 4.72 கோடி; மனைவி பெயரில், 5.24 கோடி ரூபாய் கடன் உள்ளன. சுதீஷ் பெயரில், நான்கு குற்றவியல் வழக்குகள் உள்ளன.
பா.ம.க., வேட்பாளர் அன்புமணி:
இவர் பெயரிலும், மனைவி சவுமியா மற்றும் மகள்கள் பெயரில், 68.17 கோடி ரூபாய், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளன. அன்புமணியிடம் 1.52 கோடி; மனைவி சவுமியாவிடம் 16.85 கோடி; மகளிடம் 93.82 லட்சம் ரூபாய் என, மொத்தம் 19.32 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள்; அன்புமணி பெயரில், 6.85 லட்சம் ரூபாய்; மனைவி சவுமியா பெயரில் 48.79 கோடி என, மொத்தம், 48.85 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளன.
சவுமியா பெயரில் 8.99 கோடி ரூபாய் கடன் உள்ளது. அன்புமணியிடம் 960 கிராம் தங்கம்; மனைவி சவுமியாவிடம் 2,927 கிராம் தங்கம்; மகளிடம் 551.80 கிராம் தங்க நகைகள் உள்ளன.
அன்புமணி மனைவி சவுமியாவிடம், 1.64 கோடி ரூபாய் மதிப்புள்ள, 151.51 காரட் வைரம், மகளிடம் 4.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளன.
அன்புமணி மீது மருத்துவக் கல்லுாரி அங்கீகாரத்தை புதுப்பித்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
காங்., வேட்பாளர் கிறிஸ்டோபர்:
இவர் பெயரில், 9.22 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து, 1.07 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்து உள்ளன. இவருக்கு கடன், வழக்கு எதுவும் இல்லை.
தி.மு.க., வேட்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந் திரன்: இவரிடம் 90,000 ரூபாய்; மனைவி சரோஜினியிடம் 50,000 ரூபாய்; அவரை சார்ந்து இருப்போரிடம், 1.25 லட்சம் ரூபாய் உள்ளன.
இவரிடம் 15 சவரன், மனைவியிடம் 75 சவரன், அவரை சார்ந்து இருப்போரிடம், 105 சவரன் தங்க நகைகள் உள்ளன.
மொத்தமாக, இவரது பெயரில் 22.75 லட்சம்; மனைவி பெயரில் 1.38 கோடி; அவரை சார்ந்து இருப்போரிடம் 1.42 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன.
இவர் பெயரில், 3.80 கோடி; மனைவி பெயரில் 1.43 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளன. மனைவி பெயரில், 59 லட்சத்து 74,985 ரூபாய் கடன் உள்ளது.
