சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்! (ஜூலை 19, 1969)
கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் துணிச்சலுடன் தேசியமயமாக்கியது அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு!
அன்று vs இன்று:
அன்று: பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க தனியார் வங்கிகளை அரசுடமையாக்கிய தொலைநோக்கு பார்வை!
இன்று: பாஜகவின் “Double Engine” ஆட்சியில், மக்களின் பொதுத்துறை வங்கிகளை இணைத்து சுருக்கியும், பொதுச்சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தும் வருகின்றனர்.அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கே!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
