அபுஜா: நைஜீரியாவில் ஆயுதங்களுடன் பைக்கில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர்

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதங்களுடன் பைக்கில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் ஏராளமாக உள்ளன. அந்த கும்பல்கள், கடத்தல், கொள்ளை, பாலியல் வன்முறை உட்பட பல குற்றச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில், ஆயுதக் குழு கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளது. பைக்குகளில் வந்த ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்கள், துங்கன் டட்சே என்ற கிராமத்தில் புகுந்து விடிய விடிய துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்த அவர்கள், தப்பி ஓட முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல பெண்கள் மற்றும் குழந்தைகளம கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Source link