அப்படி இந்த கண்ணன் ரவி மகன் கல்யாண பத்திரிக்கைல என்ன தான் இருக்கு? – வைரலாகும் வீடியோ – kannan ravi marriage invitation viral in politics and cinema industry

கண்ணன் ரவி மகன் தீபக் ரவி திருமணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மயில் தோகை விரிப்பது போன்ற வடிவமைப்பு, தங்க விநாயகர் சிலை மற்றும் இனிப்புப் பெட்டிகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமணம் வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருமணத்திற்கான அழைப்பிதழை மூத்த அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கண்ணன் ரவி நேரில் வழங்கி வருகிறார்

அரசியலும் சினிமாத்துறையும் இணையும் திருமணம்

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கண்ணன் ரவி. Kannan Ravi Group தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் திரையுலகில் கவனம் பெற்றார். தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தையும் தயாரித்தார். மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தையும் KRG Productions சார்பில் தயாரிக்கிறார்; இதில் அவரது மகன் தீபக் ரவி இணை தயாரிப்பாளராக உள்ளார்.

4 நாள் நடைபெறும் திருமண நிகழ்ச்சி

தீபக் ரவி – செந்தாமரை திருமண நிகழ்ச்சிகள் அக். 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அக்டோபர் 28ஆம் தேதி காலை ஹல்தி, மாலை மெஹந்தி நிகழ்ச்சியும், 29ஆம் தேதி மாலை சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நவம்பர் 1ஆம் தேதி காலை திருமண முகூர்த்தமும் நடைபெறுகிறது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் மகாபலிபுரத்தில் உள்ள Kaldan samudhra palaceலிலும், வரவேற்பு மற்றும் திருமணம் நீலாங்கரையில் உள்ள R.K.கன்வென்ஷனிலும் நடைபெறுகின்றன.

Source link