“அப்பட்டமான பிளாக்மெயில் இது!” – மகாராஷ்டிர முதல்வருக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்

சென்னை: “திராவிட மாடல் அரசின் மதுரை – கோவை மெட்ரோ திட்டங்களை புறக்கணித்துவிட்டு, நாங்கள் அறிவித்த வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்தால்தான், நாங்கள் இதை செய்வோம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொல்வது அப்பட்டமான பிளாக்மெயிலுக்கு ஈடாகும்” என திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மே 7, 2021 அன்று, உடனடியாக மதுரை மெட்ரோ திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டார். பிப்ரவரி 20, 2023 அன்று சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மார்ச் 27, 2023 அன்று விரிவான திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

Source link