கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரால், உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈரானை முழுமையாக அழித்து விடுவோம் என டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இதற்கு பதிலடி தாக்குதல் தொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சில முக்கிய பகுதிகளை ஈரான் தாக்கியது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை “கற்காலத்திற்கு தள்ளி விடுவோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இதற்கு சற்றும் பயப்படாத ஈரான், அமெரிக்காவிற்கு அதே பாணியில் பதிலடி கொடுத்துள்ளது.
“ஈரானை மிரட்டும் அமெரிக்கா, ஏற்கனவே கற்கால மனநிலைக்கு சென்று விட்டது” என பதிலடி கொடுத்துள்ளது ஈரான்.
