தேசியப் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டி, எஃகு, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
