அமெரிக்காவில் விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

நியூயார்க்: இந்திய ஆன்மிக தலைவரான சுவாமி விவேகானந்தரை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரில், அவரது முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரு மாநகராட்சி நிர்வாகத்தால் பொது இடத்தில் விவேகானந்தருக்கு முழு உருவச் சிலை அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

சியாட்டில் மேயர் கேட்டி வில்சன் மற்றும் இந்தியா வின் துாதர் பிரகாஷ் குப்தா ஆகியோர் விழாவில் பங்கேற்று விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தனர். இந்திய சிற்பக் கலைஞர் நரேஷ் குமார் குமாவத்தால் செதுக்கப்பட்ட இச்சிலையை, ஐ.சி.சி.ஆர்., எனும் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் சியாட்டில் நகருக்கு பரிசாக வழங்கியுள்ளது.

அமேசான் தலைமையகம் மற்றும் சியாட்டில் மாநாட்டு மையம் உள்ளிட்ட மிக முக்கியமான இடங்களுக்கு அருகே, தினமும் நான்கு லட்சம் மக்கள் கூடும் வெஸ்ட்லேக் சதுக்கத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கும், அமெரிக்காவின் பசிபிக் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலான கலாசார மற்றும் மக்கள் இடையிலான உறவை மேலும் வலு ப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link