அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி கடந்த பிப்.,யில் 28 சதவீதம் சரிவு

புதுடில்லி:அமெரிக்காவுக்கு ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டின் பிப்., மாதத்தோடு ஒப்பிடும்போது கடந்த பிப்ரவரியில் 28.70 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜவுளி கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 28.70 சதவீதம் குறைந்து, ரூபாய் மதிப்பில் 63 கோடியாக குறைந்துள்ளது.

அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறைவு ஆகியவை சேர்ந்து உலக ஜவுளி வினியோகிப்பாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

Image 1562249

குறிப்பாக, இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரியும், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கினால் மேலும் 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தியது. மற்ற ஏற்றுமதி நாடுகளுக்கு வேறு மாதிரியான முடிவுகள் கிடைத்தன.

சீனாவுக்கு பலவிதமான வரிகள் கடந்த 2025ல் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 2026 பிப்.,யில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 45 சதவீதம் சரிந்தது. வியட்நாம் நாடும் 20 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டது. ஆனால் கடந்த 2026 பிப்ரவரியில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 135 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது.

பிப்., 20ம் தேதி வரி விதிப்பை நீக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின் சந்தை வேகமாக மீண்டெழுந்தது.

Source link