தெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகமான யெடியோத் அஹ்ரோனூத்தை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும், அமெரிக்கா மீடியேட்டர் ஸ்டீவ் விட்காஃபுக்கும் இடையே நடந்த இரு தரப்புக்கான பேச்சுவார்த்தை குறித்த உரையாடலுக்கு, ஈரானின் உச்ச தலைமை ஒப்புதல் அளித்துள்ளது என்று அஹ்ரோனூத் ஊடக செய்தியை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகளை நிராகரித்திருந்தார்.
