அமைச்சரின் அறிவிப்புகளே ரத்து: வீட்டுவசதி வாரியத்தின் பரிதாபம்

தவணை முறை திட்டம், ஈரோடு சம்பத் நகர் வணிக வளாகம், பழைய குடியிருப்புகள் மறுமேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் என்பது உட்பட சில அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டன. அமலுக்கு வராத அறிவிப்புகள் விபரம்:

 பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாவட்டங்களில் மனை மேம்பாட்டு திட்டம் வாயிலாக, மனைகள் உருவாக்கப்படும்

 பொதுமக்களின் தேவைக்கேற்ப, நகரின் பிரதானப் பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

 சென்னை லாயிட்ஸ் காலனியில், 451 கோடி ரூபாய் மதிப்பில், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மறுமேம்பாடு செய்யப்படும்

 வாரிய திட்டப் பகுதிகளில், குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு உதவும் வகையில், வீட்டுவசதி வாரிய திட்ட நிதியில் இருந்து, ‘கார்பஸ் பண்டு’ எனப்படும் மூலதன நிதி உருவாக்கப்படும்

 வீட்டுவசதி வாரிய திட்டங்களில் கிடைக்கும் லாபத்தில், 2 சதவீத தொகையை ஒதுக்கி, நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த, சி.எஸ்.ஆர்., நிதி உருவாக்கப்படும்

 பொருளாதாரத்தில் நலிவுற்ற, குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோருக்கு, தவணை முறை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்

 திருமழிசை திட்டப் பகுதியில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 16.92 ஏக்கர் பரப்பளவில், 1,280 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படும்

 வீட்டுவசதி வாரியத்தால், நீண்ட காலத்துக்கு முன் கட்டி விற்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களை மறுகட்டுமானம் செய்ய வாரியம் துணைபுரியும்

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மேம்படுத்தப்பட்ட 125 மனைகளில், 59 கோடி ரூபாயில் பொது – தனியார் கூட்டு முறையில் குடியிருப்புகள் கட்டப்படும்

 ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில், 34 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் பங்கேற்புடன் கூட்டு முறையில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும்

 சென்னை முகப்பேர், காஞ்சிபுரம் பல்லவன் நகரில், தனியாருடன் இணைந்து, கூட்டு முறையில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும்.

Source link