அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி வருகிறார்கள். அதோடு, மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் காலை முதலே மயிலாப்பூர், வடபழனி, கீழ்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் தீடீர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனை முடிந்த பிறகுதான் கைப்பட்டப்பற்ற ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.

Source link