காரைக்குடி: ‘அரசியல் என்பது ஒரு வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை’ என சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் பிரசாரத்தில் பேசாமல் சென்ற விஜயை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், மக்கள் கூறும் பிரச்னையை கேட்க வேண்டும். அதனை தீர்க்க எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும். காங்கிரசின் ஒரு குடும்பம் மொத்த காரைக்குடியையும் பிடித்து வைத்து இருக்கிறார்கள். சிதம்பரம் குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால், அவருக்கு பிறகு அவரது மகன். அவர்கள் காரைக்குடி, சிவகங்கைக்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று கேட்டால், எதுவும் இல்லை.
ஒரு வங்கியின் 4 ஏடிஎம் காட்டி, நான் நிதியமைச்சராக இருந்த போது ஏடிஎம் திறந்தேன் என கடந்த 15 ஆண்டுகளாக ஒரே ஒரு விஷயத்தை பேசி கொண்டு இருக்கிறார். காரைக்குடி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் தான் இந்த வளர்ச்சியை நோக்கி ஓட்டளிக்க வேண்டும். சிதம்பரம் குடும்பத்தினர் மக்களுக்கு எதையும் செய்யாமல் வெட்கம் இல்லாமல் ஓட்டு கேட்கிறீர்கள், உங்களை என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
வண்டியின் மேல
காரைக்குடியில் பார்த்தேன். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ரோடு ஷோ நடந்தது.வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை. வெயிலில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களுடன் இருக்க வேண்டும். காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். 9ஆண்டு அவர் சிறையிலும் இருந்து இருக்கிறார். காமராஜரின் மொத்த வாழ்க்கையில் 9 ஆண்டு காலம் சிறையில் இருந்து இருக்கிறார். கஷ்டத்தை பார்த்து இருக்கிறார். இன்றைக்கு வரும் எந்த அரசியல்வாதியையும் நான் தவறாக சொல்லவில்லை.
மாற்றம்
இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள். 18 வயதில் ஓட்டு போடக்கூடிய இளைஞர்கள் 17 லட்சம் பேர் இருக்கின்றனர். தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது.
20 வயதில் இருந்து 29 வயது வரைக்கும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் இருக்கிறீர்கள். 29 வயதிற்கு கீழ், ஒரு கோடியே 28 லட்சம் பேர் இந்த முறை ஓட்டு செலுத்த இருக்கிறார்கள். இளைஞர்கள் பட்டாளத்திற்கு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மாற்றம் என்பது உங்களுக்காக தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கடந்த தேர்தல் அறிக்கையின் ‘கட், காப்பி, பேஸ்ட். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
