அரசியல் ஒரு வணிகமாக மாறிவிட்டது.. தேர்தல் மட்டுமே நமது இலக்கல்ல- புதுச்சேரியில் திருமாவளவன் பேச்சு – vck thirumavalavan says in puducherry that politics has turned into a business

இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் என்பது ஒரு வணிகமாக மாறிவிட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரியில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் அக்கட்சியை தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,அரசியலில் வெண்ணியம், மாட்சியம் என்ற சொற்கள் பழக்கமானவை தான். ஆனால் அந்த தத்துவம் என்ன என்பதை எந்த அளவுக்கு நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதன் அடிப்படையில் கோட்பாடுகளையாவது நாம் அறிந்திருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

விசிக மாநில செயற்குழு கூட்டம்

எந்த அரசியல் கட்சி பெரிய அக்கறை காட்டுவதில்லை. ஒரு சில கட்சிகளை தவிர அரசியல் என்பது ஒரு வணிக சொல்லாக மாறிவிட்டது. அரசியலில் ஈடுபட்டால் விரைவில் பதவி பெறலாம், பரிசு கிடைக்கும், அதிகார சுகம் கிடைக்கும், பொருளை இலகுவாக ஈட்டிக் கொள்ள முடியும். வாங்கலாம் வீடு கட்டலாம் ,தோட்டம் துறவு வாங்கலாம் என்கிற நிலையில் அரசியல் என்பது ஒரு வணிக சொல்லாக மாறிவிட்டது. வணிகத்தளமாக மாறிவிட்டது . குறிப்பாக அரசியல் வணிகத்திற்கான ஒரு களமாக மாறிவிட்டது என்பதுதான் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

ஆனால் அரசியல் என்பது மிகவும் ஆழமானது .ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. அது ஒரு விஞ்ஞானம் .. அது ஒரு சைன்ஸ்.. அரசியல் இயக்கங்கள் இத்தகைய கோட்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவையாக வலிமை பெறுகின்ற போது சமூகத்தில் முற்போக்கான மாற்றங்கள் நிகழும். மேலும் தேசத்தில் முற்போக்கான மாற்றங்கள் நிகழும் இல்லையேல் என்று கூறினார்.

அரசியல் வணிகத்திற்கான ஒரு களமாக மாறிவிட்டது

மேலும் மேலும் ஒரு தேசம் பின்னடைவை சந்திக்கிறது என்றால் அங்கு அரசியல் புரிதல் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அரசியலை நம்மைப் பொறுத்தவரையில் தேர்தலுக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு இயக்கம் இல்லை.. கட்சி தொடங்கிய தொடக்கத்திலேயே தேர்தல் பாதை வேண்டாம் என்று முடிவெடுத்து களமிறங்கியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். ஆகவே தேர்தல் நமது முதன்மையான இலக்கு அல்ல..

அதுதான் நம்முடைய இலக்கு என்று இருந்தால் ஆரம்பிக்கிற போதே நாம் தேர்தல் அரசியலை பேசி இருப்போம்.சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்கிற வேட்கையை கொண்டிருப்போம். கட்சி தொடங்குகிறபோதே அதிகார தேடலோடு களமிறங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் வியக்கத்தை தொடங்குகிற போது விடுதலை சிறுத்தைகள் என்கிற பெயரை அறிவித்த போது நமக்கான கருத்தியல் கலங்கை என்ன என்பதை வரிசைப்படுத்தினோம். வகைப்படுத்தினோம்.

திருமாவளவன் பேச்சு

சாதியை ஒழிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கங்களில் ஒன்று அது எங்களுக்கான ஒரு கொள்கை. அதனைவளர்த்தெடுக்க வேண்டும் என்பது நம்முடைய நோக்கங்களில் ஒன்று. இதை சொல்லுகிற போது நமக்கு தேர்தல் அரசியல் ஈடுபாடு கிடையாது பாட்டாளி மக்கள் விடுதலை. அது கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கோட்பாடு என்று மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், ஒரு அம்பேத்கர் இயக்கம் பாட்டாளி மக்கள் விடுதலையை ஒரு கொள்கையாக கோட்பாடாக பிரகடனம் செய்தது 90களில் தொடக்கத்தில் பெண் விடுதலை இனிய பேசக்கூடிய குழுக்களின் அரசியலாக இருந்தது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அரசியலாக இருந்தது வெறும் மகளிர் இயக்கங்களின் குரலாக ஒழித்துக் கொண்டிருந்தபோது ஒரு மிக மக்கள் இயக்கத்தின் கொள்கையாக 90களில் தொடக்கத்தில் கொரத்து முழங்க பெற்ற கொள்கைதான் பெண் விடுதலை என்கிற மகளிர் விடுதலை என்று கூறினார்.

Source link