அரசியல் கட்சிகள் அலுவலகங்கள் விவகாரம்; தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து தி.மு.க., வழக்கு

சென்னை: ‘சட்டசபை தேர்தலுக்காக கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் அலுவலகங்களை, நிரந்தர கட்டடங்களாக அமைக்க வேண்டும்’ என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு தொகுதியிலும், அரசியல் கட்சிகள் சார்பில், தற்காலிக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அலுவலகங்களை நிரந்தர கட்டடங்களில் அமைக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், ‘மனுவை பட்டியலிடும் நடைமுறைகள் முடிந்தால், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்’ என தெரிவித்தனர்.

Source link