அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் குளிர்பானம்; ஆசிரியர்கள் செயலால் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தேர்தல் திருவிழாவில் சிக்கியுள்ள வேட்பாளர்கள் வெயில் தாக்கத்தோடு சுற்றி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் பள்ளி மாணவர்கள் கோடை கால தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதால் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் கோடைகாலம் முடியும் வரை தினசரி சுமார் 150 மாணவ, மாணவிகளுக்கு நீர் மோர், எழுமிச்சை பழ சூஸ் உள்பட பல்வேறு குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.

மாணவர்கள் கோடை காலத்தில் வெக்கையால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் எங்கள் மாணவ, மாணவிகளுக்கு தினமும் பழரசங்கள், மோர் கொடுக்கிறோம். இது கோடை காலம் முடியும் வரை கொடுப்போம் என்றனர். இதே போல மற்ற பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கின்றனர் பெற்றோர்கள்.

Source link