அரியலுார்: ”தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,” என துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை; 100 நாள் வேலை திட்டத்தை முடக்குகிறது. இதற்கு, அ.தி.மு.க., துணை நிற்கிறது. விரைவில் பா.ஜ.,விடம், அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். பா.ஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்; முதல்வர் ஸ்டாலின் அஞ்ச மாட்டார்.
ஒட்டு மொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் கிளீன் போல்ட் ஆக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
