அர்னாப் புயல் செல்லும் பாதை: வங்கக்கடல் டூ விசாகப்பட்டினம்- அடுத்த 4 நாட்கள் டைம்லைன் இதுதான் – timeline of arnab cyclone forming in bay of bengal and intensified landfall in near visakhapatnam

நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயலாக அர்னாப் உருவாகவுள்ளது. இதனால் எங்கெல்லாம் மழை கொட்டி தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் புயல் உருவாகும் கரு முதல் கரையை கடந்து வலுவிழக்கும் நிலை வரையிலான டைம்லைன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 10 நாட்கள் கடந்த சூழலில் இதுவரை புயல் எதுவும் உருவாகவில்லை. வடகிழக்கு பருவமழை காலத்தை பொறுத்தவரை வடக்கு இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் தான் பெரும்பாலான புயல்கள் உருவாகும். அரபிக் கடலில் அரிதாகவே புயல்கள் எட்டி பார்க்கும்.

வடகிழக்கு பருவமழை சீசன் – வங்கக்கடலில் முதல் புயல்

அந்த வகையில் நடப்பு பருவமழை காலத்தில் முதல் புயல் நாளைய தினம் (அக்டோபர் 26, 2026) உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு வங்கதேசம் பரிந்துரை செய்த ”அர்னாப்” என்ற பெயர் வைக்கப்படுகிறது. அர்னாப் என்றால் பெங்காலி மொழியில் பெருங்கடல் என்று அர்த்தம். இன்று காலை நிலவரப்படி வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

இலங்கையில் உச்சகட்ட சோகத்தில் மக்கள்

அர்னாப் புயல் நகரும் பாதை

அக்டோபர் 26, திங்கள்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு – மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும். அதேசமயம் ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி படிப்படியாக நகரும். அக்டோபர் 27, செவ்வாய்: அர்னாப் புயல் வலுவடைந்து தீவிர புயலாக மாறும். இதனால் காற்றின் வேகம் அதிகரிக்கும். கிழக்கு கடலோர பகுதிகளின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். அக்டோபர் 28, புதன்: அர்னாப் புயல் அதி தீவிர புயலாக மேலும் வலுவடைய வாய்ப்பிருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் பாபட்லா பகுதிகளுக்கு இடையில் கரையை கடக்க ஆரம்பிக்கும். அக்டோபர் 29, வியாழன்: நிலப்பரப்பில் பலத்த காற்று மற்றும் கனமழை உடன் புயல் நகரும். புயலின் வலு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதேசமயம் ஆந்திரா, ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களில் மழையின் தீவிரத்தை பார்க்க முடியும்.

சென்னையில் முன்னெச்சரிக்கை – தமிழகத்தில் பாதிப்பில்லை

அர்னாப் புயலால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும் சென்னையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த புயலை பொறுத்தவரை ஆந்திராவில் தான் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். அங்கு பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அர்னாப் புயலால் மழை- வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு

1 ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் – விசாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்கலாம் என்கின்றனர். 2 கிழக்கு தெலங்கானாவில் உள்ள கம்மம், பத்ராத்ரி – கொதகுடேம், முலுகு, மஹுபுபாத் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். 3
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மிட்னாபூர், மேற்கு மிட்னாபூர், ஜர்கிராம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. கொல்கத்தா மற்றும் தெற்கு வங்கதேசத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். 4
பங்குரா, புருலியா பகுதிகளில் நடப்பு வாரத்தில் இறுதியில் நல்ல மழை பெய்யக்கூடும்.

Source link