கா ர்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், அலுவலக பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் செலவுகளுக்காக, ‘அலுவலக செலவு அட்டை’ ஒன்றை ‘பைன் லேப்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதனை ‘பைன் லேப்ஸ் மற்றும் ப்ரோஎக்ஸ்பென்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து, ‘கோ – பிராண்டடு கார்ப்பரேட் ப்ரீபெய்டு’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளன.
இந்த கார்டுகள், ப்ரோஎக்ஸ்பென்ஸ் நிறுவனத்தின் பயணம் மற்றும் செலவு மேலாண்மை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கார்டை பயன்படுத்தும் நிறுவனத்தின் ஊழியருடைய பதவி, பயண திட்டம், இடம், செலவு வகை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு செலவு வரம்பு மற்றும் விதிகளை முன்கூட்டியே நிர்ணயிக்கலாம்.
அதேபோல, விதிமீறல்கள் இருப்பின் கார்டை முடக்கவும் முடியும். எனவே, அலுவலக நிமித்தமாக பயணம் செய்யும் ஊழியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, திரும்ப பெறுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
