அஷ்வின் நெஞ்சம் தாங்குமா

சென்னை: இந்திய அணியின் முன்னாள் ‘ஸ்பின்னர்’ அஷ்வினை, சென்னை அணி ரூ. 9.75 கோடிக்கு வாங்கியது. 2025ல் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. 14 போட்டியில் 9ல் மட்டும் பங்கேற்றார். இந்த விரக்தியில் ஓய்வை அறிவித்தார்.

அஷ்வின் கூறுகையில்,”கிரிக்கெட் லீக் தொடரில் இன்னும் சில காலம் விளையாடியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் சென்னை அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய அனுபவம் ஏமாற்றம் அளித்தது. உணர்ச்சிவசப்ட்ட நிலையில் ஓய்வை அறிவித்தேன். மனதளவில் வலியை உணர்ந்தேன். ‘சென்னையில் துவங்கினோம்…சொந்த மண்ணிலேயே விடைபெறுவோம்’ என முடிவு செய்தேன். என்னை தக்க வைக்க வேண்டுமா அல்லது விடுவிக்க வேண்டுமா என்ற நெருக்கடியை நிர்வாகத்திற்கு கொடுக்க விரும்பவில்லை. நான் ஓய்வு பெற்றதால், ரூ. 9.75 கோடி கிடைத்தது. இந்த தொகையை வைத்து ‘மினி’ ஏலத்தில் தரமான வீரர்களை வாங்கி, வலுவான அணியை கட்டமைத்திருக்கலாம். இது நடக்காததால், ஏமாற்றம் அடைந்தேன்.

சென்னை-பெங்களூரு மோதலுக்கு எதிர்பார்ப்பு அதிகம். இம்முறை சென்னை தோற்றதை விவரிப்பது கடினம். அனுபவம் இல்லாத நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களை பொறுப்பேற்க சொல்ல முடியாது,”என்றார்.

Source link