அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு

சென்னை: ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,௦௦௦ ரூபாய், உதவித் தொகை வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு, த.மா.கா., ஆதரவும், தி.மு.க., எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

அதன் விபரம்:

தி.மு.க., மாணவரணி மாநில செயலர் ராஜிவ்காந்தி: பா.ஜ.,வின் கால்களை பிடித்து, கருணை அடிப்படையில், கட்சி நடத்திக் கொண்டிருக்கும் பழனிசாமி, மக்களுக்கு கருணைத் தொகை கொடுக்கப் போகிறாராம்.

உங்களிடம் கருணை வாங்க, நீங்கள் ஒன்றும் மக்களுக்கான எஜமான் இல்லை. பா.ஜ.,வின் தயவில் உயிர் வாழும் அடிமை நீங்கள். உங்களுக்கு பிடித்திருக்கும் இந்த ஆணவத்திற்கு, சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழக மக்கள், இந்த தேர்தலிலும் மருந்து கொடுப்பர்.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: அனைத்து குடும்பத்திற்கும், கருணைத் தொகையாக, ஒரு முறை 10,௦௦௦ ரூபாய் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றன. தே.ஜ., கூட்டணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் அடித்தளமான, இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link