கோவை: வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை அ.தி.மு.க., அலுவலகத்திற்கே வரவழைத்து பரிசுபொருட்களை வழங்கினர் ரத்தத்தின் ரத்தங்கள்.
தேர்தல் அறிவிப்பு வந்து விடும் அதன் பின்பு பரிசுபொருட்களை வாக்காளர்களுக்கு வழங்க இயலாது என்று நினைத்த அ.தி.மு.க.,வினர். நேற்று காலை, கோவை ஓசூர் சாலையிலுள்ள இதயம் தெய்வம் மாளிகைக்கு மகளிர் பிரிவு நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப்குழுக்கள் வாயிலாக தகவல் தெரிவித்தனர்.
மகளிர் பிரிவு நிர்வாகிகள் அங்கு வார்டு வாரியாக வாக்காளர்களை ஆட்டோக்களில் அழைத்து வந்தனர். அவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் ஹேண்ட் பேக்குகள், வாட்டர் பாட்டில்கள், ஹாட் பிளாஸ்க்குகள் உள்ளிட்ட ஐந்து வகையான பொருட்களை வழங்கினர். அனைத்து மகளிரும் மகிழ்ச்சியுடன் பரிசுப்பொருட்களை பெற்றுச் சென்றனர்.
பரிசுப்பொருட்களை பெற்ற மகளிர் கூறுகையில்,’அ.தி.மு.க., வினர் ஆண்டுதோறும் வாக்காளர்களுக்கு ஜெ.,பிறந்தநாளில் பரிசுப்பொருட்களை வழங்குவர். இந்த ஆண்டு தேர்தல் வருவதால் கூடுதலாக பரிசு பொருட்களை கொடுத்துள்ளனர்,’ என்றனர்.
