அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான 127 பேர் ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் அம்மன் கே. அர்ச்சுணன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர். ஜெயராம் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் செ. தாமோதரன் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் களம் காண்கின்றனர். வால்பாறை (தனி) தொகுதியில் டி. லட்சுமண சிங் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதியில் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

பழனி தொகுதிக்கு கே. ரவி மனோகரன் மற்றும் ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிக்கு ஏ. விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நிலக்கோட்டை (தனி) தொகுதியில் எஸ். தேன்மொழி  மற்றும் வேடசந்தூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் கே. செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் எஸ். திவ்யா மற்றும் குளித்தலை தொகுதியில் எஸ். கருணாகரன் ஆகியோர் வேட்பாளர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர். மணப்பாறை தொகுதியில் பி.எல். விஜயகுமார் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆர். மனோகரன் ஆகியோர் களம் காண்கின்றனர். திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் க. இராஜசேகரன், திருவெறும்பூர் தொகுதியில் ப. குமார் மற்றும் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

முசிறி தொகுதியில் யோகநாதன் மற்றும் துறையூர் (தனி) தொகுதியில் இ. சரோஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெரம்பலூர் (தனி) தொகுதியில்  இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நெய்வேலி தொகுதியில் சொரத்தூர் இரா. இராஜேந்திரன், பண்ருட்டி தொகுதியில் மோகன் மற்றும் கடலூர் தொகுதியில் எம்.சி சம்பத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ. புவனேந்திரன், புவனகிரி தொகுதியில் ஆ. அருண்மொழிதேவன் மற்றும் சிதம்பரம் தொகுதியில்  கே.ஏ. பாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Source link