அ.தி.மு.க.,வின், ‘சென்டிமென்ட் பார்முலா’வை கையில் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய துவங்கியுள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க., – எம்.பி., ஆ.ராஜா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தாய் குறித்து ஒரு கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அதை மையமாக வைத்து, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தை முன்னெடுத்தனர்; விளைவாக, கொங்கு மண்டலம் அ.தி.மு.க., வசமானது.
சமீபத்திய பிரசாரத்தில், ‘கொரோனா காலத்தில், அ.தி.மு.க., சிறப்பாக செயல்படாமல் இருந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் போய் சேர்ந்திருப்பார்’ என, பழனிசாமி பேசினார். பின்னர், அவ்வாறு பேசவில்லை எனவும் விளக்கம் அளித்து விட்டார்.
ஆனால், இந்த விஷயத்தை மையமாக வைத்து, முதல்வர் ஸ்டாலினும் தி.மு.க.,வினரும் பிரசாரம் செய்து வருகின்றனர். ‘மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், புதுமை பெண்கள், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை தந்த நான், இல்லாமல் போக வேண்டும் என பழனிசாமி நினைக்கிறார்’ என, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
தி.மு.க., நிர்வாகிகளும் வேட்பாளர்களும், மேடைகளிலும் வாகன பிரசாரத்திலும், முதல்வர் குறித்து பழனிசாமி பேசிய பேச்சை கண்டித்து, முழங்க துவங்கி உள்ளனர்.
