அ.தி.மு.க.வின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் 127 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார். அதன்படி, சீர்காழி (தனி) தொகுதியில் ம. சக்தி மற்றும் பூம்புகார் தொகுதியில் எஸ். பவுன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாகப்பட்டினம் தொகுதியில் தங்க. கதிரவன் மற்றும் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் உ. பாலதண்டாயுதம் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் இளமதி சுப்பிரமணியன், பாபநாசம் தொகுதியில் டி. சண்முகபிரபு, ஒரத்தநாடு தொகுதியில் எம். சேகர், பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி. சேகர் மற்றும் பேராவூரணி தொகுதியில் கோவி. இளங்கோ ஆகியோர் களம் காண்கின்றனர். திருமயம் தொகுதியில் பி.கே. வைரமுத்துவும், சிவகங்கை தொகுதியில் பி.ஆர். செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர். 

மேலூர் தொகுதியில் பி. பெரியபுள்ளான் (எ) செல்வம், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் கே. மகேந்திரன், சோழவந்தான் (தனி) தொகுதியில் கி. மாணிக்கம் மற்றும் மதுரை வடக்கு தொகுதியில் பி. சரவணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி தொகுதியில் முன்னாள் ஐ. மகேந்திரன் மற்றும் ஆண்டிபட்டி தொகுதியில் ஏ. லோகிராஜன் ஆகியோர் களம் காண்கின்றனர். போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமி மற்றும் கம்பம் தொகுதியில் எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் எம். சந்திரபிரபா மற்றும் விருதுநகர் தொகுதியில் வி.ஜி. கணேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அருப்புக்கோட்டை தொகுதியில் எஸ். சேதுபதி மற்றும் பரமக்குடி (தனி) தொகுதியில் டாக்டர் எஸ். முத்தையா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

திருவாடானை தொகுதியில் கீர்த்திகா முனியசாமி மற்றும் முதுகுளத்தூர் தொகுதியில் மலேசியா எஸ். பாண்டி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை, விளாத்திகுளம் தொகுதியில் ஆர். சத்யா, தூத்துக்குடி தொகுதியில் சி.த. செல்லப்பாண்டியன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் திலிபன் ஜெய்சங்கர் மற்றும் கடையநல்லூர் தொகுதியில் கிருஷ்ணமுரளி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தென்காசி தொகுதியில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் ஆலங்குளம் தொகுதியில் கே.ஆர்.பி. பிரபாகரன் ஆகியோர் களம் காண்கின்றனர். திருநெல்வேலி தொகுதியில் தச்சை என். கணேசராஜா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் என். தளவாய்சுந்தரம் ஆகியோருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source link