ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் சச்சின்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் சச்சின், நரேந்தர், மீனாட்சி உள்ளிட்டோர் முன்னேறினர்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச், சீனதைபேயின் செங்-வெய் லீ மோதினர். இதில் சச்சின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் (90+ கிலோ) இந்தியாவின் நரேந்தர் 5-0 என, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஓர்கான் அகாயேவை வீழ்த்தினார்.

இந்திய வீரர் லோகேஷ் (85 கிலோ) 5-0 என, தென் கொரியாவின் கிச்சே கிம்மை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆகாஷ் (75 கிலோ) 5-0 என, துர்க்மெனிஸ்தானின் இஹ்லாஸ் பாக்தியாரோவை வீழ்த்தினார். இந்தியாவின் ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ) 5-0 என, கிர்கிஸ்தானின் அலிபாயெவை வென்றார்.

பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மீனாட்சி, ஜப்பானின் யுகா சடாமட்சு மோதினர். இதில் மீனாட்சி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் (57 கிலோ) இந்தியாவின் ஜேஸ்மின், சீனாவின் ஜியி சென் மோதினர். இதில் ஜேஸ்மின் 5-0 என வெற்றி பெற்றார்.

Source link