உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் ஆதித்யா முன்னேறினார்.
மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் ஆதித்யா பிரதாப் யாதவ், சவுதி அரேபியாவின் மூசா அல்ஹவ்சா மோதினர். சமீபத்தில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆதித்யா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில், உஸ்பெகிஸ்தானின் அப்துல்லோ மடாமினோவை எதிர்கொள்கிறார்.
இத்தொடரில் இந்தியா சார்பில் பிரீத்தி (54 கிலோ), நிகாத் ஜரீன் (51 கிலோ), பிரியா (60 கிலோ), தீபக் (70 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), விஷ்வநாத் சுரேஷ் (50 கிலோ) ஆகியோர் காலிறுதிக்குள் நுழைந்தனர்.
