ஆசிய கூடைப்பந்து: இந்தியா அபாரம்

சிங்கப்பூர்: ஆசிய கூடைப்பந்து (3X3) பிரதான சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

சிங்கப்பூரில், ஆண்களுக்கான ஆசிய கூடைப்பந்து (3X3) 9வது சீசன் நடக்கிறது. இதன் தகுதிச் சுற்றில் 14 அணிகள், 4 பிரிவுகளாக விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் பிரதான சுற்றுக்குள் நுழைந்தன.

‘டி’ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி, தனது முதல் போட்டியில் 20-18 என, கஜகஸ்தானை வீழ்த்தியது. தொடர்ந்து அசத்திய இந்தியா, 2வது போட்டியில் 19-18 என ஹாங்காங் அணியிடம் ‘திரில்’ வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 21-12 என, பஹ்ரைனை வென்றது. முடிவில், ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, தொடர்ந்து 2வது ஆண்டாக பிரதான சுற்றுக்குள் நுழைந்தது. இதில்

இந்திய அணி ‘டி’ பிரிவில் நியூசிலாந்து, கத்தார் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

பெண்களுக்கான ‘பி’ பிரிவு தகுதிச் சுற்றில் மலேசியாவிடம் (16-13) தோல்வியடைந்த இந்தியா, துர்க்மெனிஸ்தானை (4-21) வீழ்த்தியது. முடிவில் ‘பி’ பிரிவில் 2வது இடம் பிடித்த இந்தியா, பிரதான சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

Source link