ஆசிய பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் சிந்து

நிங்போ: ஆசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, பிரனாய், ஆயுஷ் ஷெட்டி முன்னேறினர்.

சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, மலேசியாவின் லிங் சிங் வோங் மோதினர். இதில் சிந்து 15-21, 21-11, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா10-21, 19-21 என, தாய்லாந்தின் புசானனிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் தான்வி சர்மா 19-21, 14-21 என, மலேசியாவின் லெட்ஷனாவிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், வியட்நாமின் ஹாய் டாங் நுகுயன் மோதினர். இதில் பிரனாய் 24-22, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என, சீனாவின் லின் ஷி பெங்கை தோற்கடித்தார்.

இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 9-21, 11-21 என லோ கீன் யேவிடம் வீழ்ந்தார். இந்தியாவின் லக்சயா சென் 12-21, 19-21 என ஹாங்காங்கின் சியுக் யியூ லீயிடம் தோல்வியடைந்தார்.

Source link