நிங்போ: ஆசிய பாட்மின்டனில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி விலகியது.
சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது. இதன் ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்க இருந்தது. ஆனால் தோள்பட்டை காயத்தால் சாத்விக் அவதிப்படுவதால் இந்த ஜோடி விலகியது. கடந்த 2023ல் துபாயில் நடந்த இத்தொடரில் சாத்விக், சிராக் ஜோடி தங்கம் வென்றிருந்தது.
இம்முறை ஆண்கள் இரட்டையரில் அர்ஜுன், ஹரிகரன் ஜோடி மட்டும் விளையாடுகிறது.
ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், பிரனாய், ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையரில் சிந்து, உன்னாதி ஹூடா, தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் களமிறங்குகின்றனர். இந்திய நட்சத்திரங்கள் அசத்தினால், 61 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் ஒற்றையரில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கும்.
கடைசியாக 1965ல் லக்னோவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கண்ணா தங்கம் வென்றிருந்தார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிசா, அஷ்வினி பாட்-ஷிகா கவுதம் ஜோடி களமிறங்குகின்றன. கலப்பு இரட்டையில் தனிஷா கிராஸ்டோ-துருவ் கபிலா, ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி ஜோடி பங்கேற்கின்றன.
