"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" – பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

“‘ஜெய் பீம்’, ‘மாமன்னன்’ போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது”- பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜ்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

“பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது.

இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன.

அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை. தென்னிந்திய சினிமாக்களை குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பாருங்கள், அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்னைகளையும் அவை தைரியமாகப் பேசுகின்றன.

“ஜெய் பீம்’, ‘மாமன்னன்’ போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

Source link