ஆட்டோ பிடிக்கணுமா? 5 கி.மீ போக ரூ.130 சார்ஜ்- மும்பை பரவால, தமிழ்நாடு ரொம்ப ஜாஸ்தி – costliest auto ride in tamil nadu compared to mumbai bengaluru kerala

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் பல ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தப்பட்டிருப்பது, ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை விட பயணம் காஸ்ட்லியாக மாறியுள்ளது.

அக்டோபர் 27, 2026 அன்று தமிழக அரசு ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பான அரசாணையை வெளியிட்டது. இது உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு மேல் கூடுதல் கட்டணம் கேட்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு ஆட்டோ பயண கட்டணம்

கிண்டியில் இருந்து கோயம்பேடு புறப்பட்டு செல்வதாக வைத்து கொள்வோம். அதிகாரப்பூர்வ மீட்டரை வைத்து கணக்கிடும் ஆட்டோ ஓட்டுநர்கள் அக்டோபர் 27க்கு முன்பு 140 முதல் 150 ரூபாய் வாங்கியிருப்பர். ஆனால் தற்போது சுமார் 300 ரூபாய் வரை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே இரவு நேர பயணம் என்றால் அப்படியே டபுளாகி விடும். 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி-மினி ஏசி பஸ் திட்டம்!

உயர்த்தப்பட்ட ஆட்டோ கட்டண விவரங்கள்

கட்டண விவரம் 2013ஆம் ஆண்டு 2026ஆம் ஆண்டு குறைந்தபட்ச கட்டணம் (முதல் 1.8 கி.மீ) 25 50 கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் 12 25 வெயிட்டிங் சார்ஜ் 3.50/ 5 நிமிடங்கள் 1/ நிமிடம் இரவு நேர கட்டணம் (11pm-5am) 50 சதவீதம் எக்ஸ்ட்ரா 50 சதவீதம் எக்ஸ்ட்ரா இந்த கட்டண உயர்வு எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு மாற்றியிருக்கிறது. இங்கு மட்டும் தான் அதிக கட்டணமா? மற்ற மாநிலங்களில் எப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில் முக்கிய நகரங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் கட்டணம் அதிகமாக உள்ளது.

பிற மாநிலங்கள் உடன் தமிழக ஆட்டோ கட்டணம் ஒப்பீடு

மாநிலம்/ மண்டலம் 5 கி.மீ தூர கட்டணம் அடிப்படை கட்டண விவரம் தமிழ்நாடு 130 50/ 1.8 கி.மீ + 25/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் தக்‌ஷின கன்னடா 120.5 40/ 1.5 கி.மீ + 23/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் மும்பை மாநகர் 90.77 27/ 1.5 கி.மீ + 18.22/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் பெங்களூரு 90 36/ 2 கி.மீ + 18/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் தெலங்கானா 77.60 30/ 1.6 கி.மீ + 14/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் டெல்லி 68.50 30/ 1.5 கி.மீ + 11/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் கேரளா 82.50 30/ 1.5 கி.மீ + 15/ கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும்

கூடுதல் ரேட் கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

இவ்வாறு கட்டண உயர்த்தப்பட்டாலும் அதை சரியாக பின்பற்றுகிறார்களா, இல்லை அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து காத்திருந்தால் சிறிது நேரத்தில் தொலைபேசி அழைப்பு வரும். அப்போது எக்ஸ்ட்ரா எவ்வளவு தருகிறீர்கள் என்று பேரம் பேச தொடங்கிவிடுவார்கள்.

ஆட்டோ கட்டணம் – தவிக்கும் சாமானியர்கள்

சிலர் மொபைல் ஆப்பில் மேசெஜ் அனுப்பி, இவ்வளவு ரூபாய் என்றால் ஓகே என்றால் வருகிறேன். இல்லையெனில் வேறு ஆட்டோ பார்த்து கொள்ளுங்கள் என கறார் காட்டுவர். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் பேரம் பேச முடியாது. ஆப்பில் காட்டும் சரியாக கட்டணத்தை மட்டும் வாங்கு கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கவும் முடியாது. பீக் ஹவர்கள், அவசர தேவைகள், இரவு நேரங்கள், குடும்பத்துடன் செல்லும் போது வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்திவிட்டு வர வேண்டிய சூழல் நிலவுகிறது.

Source link