ஆத்தூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த தேனி முன்னாள் எம்.பி., சையதுகான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அமைச்சர்

ஆத்தூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த தேனி முன்னாள் எம்.பி., சையதுகான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அமைச்சர் பெரியசாமியை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்த அமைச்சர்பெரியசாமி, பன்னீர் செல்வம் மதுரையில் நடத்திய இணைப்பு விழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளரான அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., சையதுகான் நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்துாரில் அமைச்சர் பெரியசாமியை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்தார். கம்பம் தொகுதி இணை செயலாளர் இளையராஜா, இளைஞரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் தி.மு.க.,வில் இணைந்தனர்.

Source link