“ஆபாச இணையதளத்தில் எனது புகைப்படம்” – ஜான்வி கபூர் மன வேதனை

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “எனக்கு 15 வயதாக இருக்கும் போது ஒரு ஆபாச இணையதளத்தில் எனது புகைப்படம் இருப்பதை பார்த்தேன். அது டீப் ஃபேக் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் அது அப்படித்தான் இருந்தது. 

எனது பள்ளியில் தகவல் தொழில்நுட்ப வகுப்பு இருக்கும். அப்போது மாணவர்கள் வேடிக்கையாக அந்த இணையதளங்களுக்கு செல்வார்கள். அப்போது எனது புகைப்படங்களும் இருந்தன. அதுவும் நான் பள்ளியில் இருந்த போதே. அது ஒரு மோசமான அனுபவமாக இருந்தது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் அறம் என்பதே கிடையாது. இன்றளவும் ஏஐ-யால் உருவாக்கப்பட்ட எனது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதுவும் அதிகாரப்பூர்வ பக்கங்களிலே வருகின்றன. இதனால் மன நிம்மதியே இல்லை. தொடர்ந்து பாதிக்கிறது.” என்றார். 

இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கஜோல், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் ஏஐ புகைப்படங்களால் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link