ஆப்கனில் வெள்ளம் 77 பேர் பலி: 137 பேர் காயம்

காபூல்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 10 நாட்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், 26 பேர் உயிரிழந்தனர்.

வரும் நாட்களிலும் ஆப்கன் முழுதும் மேலும் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், ஆற்றங்கரையோரம் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆப்கனில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் பெரும்பாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகும் துயர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2024ல் வசந்த காலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Source link