ஆம், பாகிஸ்தானில் என கிண்டல் செய்த அமித் ஷா/ Amit Shah mocks Rahul Gandhi over his petrol price remarks says no shortage increase in fuel rates

புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வளைகுடா போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது எனக் கூறினார்.

இந்த நிலையில் இன்று அமித் ஷா புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ராகுல் சொல்வது சரிதான். பெட்ரோல் விலை 450 ரூபாய்க்கும், டீசல் விலை 520 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. ஆனால், ராகுல்… இது நிகழ்ந்தது இந்தியாவில் இல்லை. பாகிஸ்தானில். நாட்டில் விலை நிலையாக உள்ளது. பெட்ரோலியம் பொருட்கள் தட்டுப்பாடு இந்தியாவில் இல்லை. 2-வது முறையாக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3-ல் இரண்டு பங்கு வெற்றி கொடுத்தால், புதுச்சேரி வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசம் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். இதனால் பாகிஸ்தான் அரசு விலையை குறைத்தது.

Source link