ஆனா, படம் ரிலீஸுக்குப் பிறகு அந்த ஸ்டீரியோடைப் தொடர்ந்ததுனுதான் சொல்லணும். வில்லி மாதிரியான கேரக்டர்கள் நிறைய கேட்டு வந்தாங்க. ஆனா, ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.” என்றவர்,
“ஆனா, ஒரு விஷயம்… இப்போ வரைக்கும் நான் எங்கப் போனாலும் என்னை சுப்புனுதான் அடையாளப்படுத்துறாங்க. எனக்கு அக்கதாபாத்திரம் மரியாதையையும் தேடித் தந்திருக்கு. சுப்புக்குள்ள ஒரு ஆட்டிடியூட் இருக்கும். அந்த விஷயத்துல என்னோட பர்சனலாகவும் சுப்பு கேரக்டர் கனெக்ட் ஆச்சு. என்னுடைய கேரக்டரை தாண்டி ஐயா கேரக்டரும், சப்பை கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சப்பையை அனைவரும் நசுக்கப் பார்ப்பாங்க. ஆனா, அவனுக்குள்ள ஒரு தைரியம் இருக்கும். அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. என்னுடைய கேரக்டர் கடைசியில ஹீரோ மாதிரி இருக்கும். நிறைய ஃபீமேல் ஓரியன்டட் படங்கள் வந்திருக்கு.
ஆனா, அதுல முதன்மை கதாபாத்திரங்கள் போலீஸ் மாதிரி பவர்புல்லாக இருக்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பாங்க. இந்தப் படத்துல அப்படியில்லாமல் நான் ஹீரோவாகத் தெரிவேன்.” என்றார்.
“சின்ன வயசுல ‘ராம் லக்கான்’ மாதிரியான ஜாக்கி ஷெரஃப் சாருடைய படங்களை நான் ரசிச்சு பார்த்திருக்கேன். ஸ்டார்ங்கிற உணர்வை அவர் ஷூட்டிங்ல கொடுக்கமாட்டார். எல்லோரிடமும் ஜோவியலாக பழகுவார். சொல்லப்போனால், தமிழ் கத்துக்கவும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல முயற்சி செய்வார்.
பெரிய நட்சத்திரங்கள்கூட நடிக்கும்போது கொஞ்சம் நடுக்கம் இருக்கும். ஆனா, அப்படியான விஷயங்களை எங்களுக்குக் கொடுக்காமல், நாங்க நடிப்பைக் கொண்டு வர்றதுக்கு இயல்பாக்கினாரு.
