ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதல் மேற்கொண்டதால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி இப்போது இந்திய தேசத்தின் சமையலறையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகுகளுக்கு மாறியுள்ளன. இந்த நிலை தற்போது சீரடையத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் புதுச்சேரிக்கு அருகே தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரில் சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் கிச்சன்’ இயங்கி வருகிறது. இதன் செயல்பாடு குறித்து பார்ப்போம்.
