ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை தன்வி சர்மா முன்னேறினார்.
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, அன்மோல் கார்ப் மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டான், ஆடம் பிரிங்கிள் ஜோடியை சந்தித்தது. இதில் அசத்திய ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
