ஆஷா போஸ்லே – சிவாஜி கணேசன்: ‘அண்ணன் – தங்கை’ உறவு|Asha Bhosle and Sivaji Ganesan: A Rare Bond Story

சென்னை குடும்பத்திலிருந்து…

இந்தச் சந்திப்பு இப்படியே முடிந்துவிடாமல், நட்பு, குடும்பம் என்று இன்று ஆஷா போஸ்லே மற்றும் சிவாஜியின் குடும்பத்திற்கு உறவு தொடர்ந்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் ஆஷா போஸ்லேயின் ஒரு பிறந்தநாளுக்கு, நடிகர் விக்ரம் பிரபு, ‘சென்னை குடும்பத்தில் இருந்து உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.

சிவாஜி உடனான தன்னுடைய உறவு குறித்து ஆஷா போஸ்லே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டதாவது…

“நடிகர் சிவாஜி கணேசனை என்னுடைய நண்பர் அல்லது அண்ணன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

அவர் என்னிடம் இங்கிலீஷில் பேசுவார். நான் அவரிடம் இந்தியில் பேசுவேன்.

இரவு முழுக்க இருவரும் பேசிக்கொண்டிருப்போம். அவர் என்னிடம் ‘எப்படி நீ தமிழ் பாட்டு பாடுற? உனக்கு தமிழ் சுத்தமா தெரியலேயே?’ என்று கிண்டல் செய்வார்.

நான் அவரிடம் தமிழ் பாடல் பாடி காண்பிப்பேன். அவர் அதை ரசிப்பார். இருந்தாலும், உடனே, ‘உனக்கு தமிழ் தெரியாதுதானே’ என்று கிண்டல் செய்வார்”.

Source link