ஆஸ்திரேலிய 'பார்முலா-1': ஜார்ஜ் ரசல் 'சாம்பியன்'

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்
நகரில், நடப்பு ஆண்டின் முதல் ‘கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1’ கார்பந்தயம்
நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 23 நிமிடம், 06.801 வினாடியில்
கடந்த ‘மெர்சிடஸ்’ அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல், ‘சாம்பியன்’
பட்டத்தை கைப்பற்றினார். ‘மெர்சிடஸ்’ அணியின் இத்தாலி வீரர் கிமி
ஆன்டோனெல்லி 2வது இடம் பிடித்தார்.

தென் கொரியா-ஆஸி., ‘டிரா’

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. சிட்னியில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. லீக் சுற்றில் முடிவில் தலா 7 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த தென் கொரியா, ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

மூன்றாவது சுற்றில் ஸ்வியாடெக்

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 7-6 என, அமெரிக்க வீராங்கனை கைலா டேயை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 7-6, 2-6, 6-2 என அமெரிக்காவை ஹெய்லி பாட்டிஸ்டை வென்றார்.

மெஸ்ஸி அணி வெற்றி

பால்டிமோர்: அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மயாமி, டி.சி. யுனைடெட் அணிகள் மோதின. அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி (27வது நிமிடம்) கைகொடுக்க, இன்டர் மயாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது, இந்த சீசனில் மெஸ்ஸி அடித்த 3வது கோல். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 29 கோல் அடித்திருந்தார்.

எக்ஸ்டிராஸ்

* ஐதராபாத்தில் நடந்த உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. இந்திய அணிக்கு சுனேலிதா, இஷிகா, லால்ரெம்சியாமி, ருதுஜா கைகொடுத்தனர்.

* பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த இந்திய ஓபன் ‘த்ரோ’ போட்டிக்கான, ஈட்டி எறிதலில் (20 வயது) இந்தியாவின் ஷிவம் லோஹகரே (81.08 மீ.,) தங்கம் கைப்பற்றினார். ஆனந்த் சிங் (76.94 மீ.,) வெள்ளி வென்றார்.

* மும்பையில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

Source link