இங்கிலாந்து பாட்மின்டன்: காலிறுதியில் லக்சயா

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.

பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில், உலகின் ‘நம்பர்-12’ இந்தியாவின் லக்சயா சென், 29வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் கா லாங் ஆங்கஸ் மோதினர். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய லக்சயா, இரண்டாவது செட்டை 21-23 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட லக்சயா 21-10 என தன்வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய லக்சயா 21-19, 21-23, 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Source link