“இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவே”

சென்னை: “கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி நலனும் முக்கியமானது. இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும். வலதுசாரி சக்திகள் காலூன்றக் கூடாது. அதனால் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனநிறைவே,” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பொதுத் தொகுதிகள், இரண்டு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பணியாற்றுவோம். வெறும் தேர்தல் லாபத்துக்காக வலதுசாரிகளை வலுப்பெறவிட முடியாது. வலதுசாரி, திரிபுவாத சக்திகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு கூடுதலாக உள்ளது. மாநிலங்களவை சீட் தொடர்பாக தற்போது முடிவெடுக்க முடியாது என திமுக தலைமை கூறியுள்ளது. 23 கட்சிகள் உள்ள மெகா கூட்டணி இது.

Source link